Sunday, August 17, 2008

காணாபத்யம்




அனைவருக்கும் குறிப்பாக வளர்ந்து வரும் குழந்தைகள் தமிழையும்
சமயத்தையும் நன்கு கற்றறிந்து கொள்ள எளிய முறையில் இலகுவாக
சுருக்கமாக தயாரித்து அளித்துள்ளோம்.
"கற்க கசடறக் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக"
எனும் திரு வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்றவாறு கற்கும் கல்வி தெளிவாக
கற்றுக் கொண்டு அதற்கேற்றவாறு நன்னெறியில் நாம் அனைவரும் வாழ
வேண்டும் எனும் நல் எண்ணத்தில் இந்நூலை உருவாக்கி உள்ளதோ"
காணாபத்யம்" எனும் விநாயகருக்குரிய மதத்தினை இங்கு விளக்கமாகவும்
சுருக்கமாகவும் தந்துள்ளோம்.

with the grace from our
ancestors in order to express religious values and to improve
tamil language proficiency of our children.

1. காணாபத்யம்
2. விநாயக தத்துவம்
3. விநாயக அவதாரம்
4. விநாயகருக்குரிய விரதங்கள்
5. விநாயக வழிபா6
. விநாயகருக்குரிய புஜ்பங்கள்
7. விநாயகருக்குரிய பழங்கள், திண்பண்டங்கள்
8. பஞ்சபுராணம்
9. பஞ்சபுராணம் - ஆங்கில பதம்
10.விநாயகர் அகவல்
11.விநாயகர் அகவல் - ஆங்கில பதம்
12.நன்றியுரை
13.நற்கடமைகள்

CONTENS
1. Kaanabatyam
2. Vinayaka Thaththuvam
3. Vinayaka avatharam
4. Vinayakarukkuriya virathankal
5. Vinayaka valibadu
6. Vinayakarukkuriya Pusbankal
7. Vinayakarukkuriya Balankal, Thinbandangkal
8. Banchaburanam
9. Banchaburanam in english
10.Vinayaka akaval
11.Vinayaka akaval in english
12.Nanriyurai
13.Natkadamaikal


1. காணாபத்யம்
இந்துக்களாகிய நாம் நல் இதயத்தோடும், சீவீய காலத்தில் பண்போடும,்
அன்போடும் நல்வழியில் முன்னேற ஒரு சாதனம் நமது இந்து மதம் ஆகும்.
இந்துக்களாக விளங்கும் எமக்கு இந்து மதம் வழிகாட்டுவது போலவே ஏனைய
மதங்களும்் அந்தந்த மதச் சார்புள்ளவர்களை நல்வழியில் கொண்டு செல்ல துணை
புரிகின்றன.
எமது இந்து மதம் மிகவும் புராதனமானது. இந்து பழமைவாய்ந்த ஒரு
மதமாக இருந்தாலும் மதத் தலைவர்களாக போற்றப்பட்டவர் வரிசையில் வந்த ஆதி
சங்கர் எமது மதத்தை ஆறுவகை சமய வழிபாடக வகுத்தார், ''ஷண்மதம்'' என்று
போற்றப்படும் ஆறுவகை தெய்வங்களின் வழிபாடு பற்றி தௌிவாக எமக்கு
தந்துள்ளார். தெய்வங்கள் பலவாக இருந்தாலும் பரம் பொருள் ஒன்றே எனக் கூறி;
உருவ வழிபாடு ஒன்றே பாமர உள்ளங்களை ஈர்த்து வணங்கச் செய்யும், எனவும்
சமுதாயம் பண்போடும், மாண்போடும், மேண்மையோடும் வாழ்க்கை கடலை கடந்து
செல்ல ஷண்மதம் என்கிற துடுப்பதனை வேத வழியில் வகுத்து தந்து அருள்
பாலித்து இருக்கிறார்.
ஆதி சங்கரர் வகுத்த ஷண்மதத்தில் கணபதியை வழிபடும் நெறி
''காணாபத்யம்'', சிவபெருமானை வழிபடும் நெறி ''சைவம்'', சக்தியை போற்றும்
''சாக்தம்'', முருகப் பெருமானை உபாசிக்கும் 'கௌமாரம்'', திருமாலை வணங்கும்
''வைஷ்ணவம்'',
சூரியபகவானை
வணங்கும் ''சௌரம்''
என
ஆறுவகை
வழிபாடுகளாக விளங்குகிறது. பேரொளியில் பிரகாசிக்கும் பிரணவப் பொருளாய்,
ஓங்கார தத்துவனாய,விக்ன விநாயகனாய், கண நாதனுமாய், ஐங்கரனாய் திகழும்
கணபதியின் ''காணாபத்யம்'' எனும் மதத்தினை உடைய முழுமுதற் கடவுள்
விக்னேஜ்வரரை முதலில்வழிபடுவோம்.

விநாயக தத்துவம்

ஓம் எனும் பிரணவப் பொருளாய் விளங்குபவர் விநாயகர். அவரது திருமேனி
தியானிப் போரை பரவசத்தில் ஆழ்த்தும். இப்பெருமானின் திரு உருவம்
யானை முகமும், மூன்று கண்களும் இரு பெரிய செவிகளும் ஐந்து
கரங்களும் பெரிய வயிறும், குறுகிய இரு திருவடிகளும் கொண்டது. யானை
முகம் விநாயகர்
பிரணவ ஜ்வரூபி என்பதையும் ஐங்கரங்கள் பஞ்சக்கிருத்தியத்தை செய்து
வருகின்றன என்றும், சந்திர, சூரிய, அக்கினி முக்கண்களை
உணர்த்துகின்றன என்றும் கூறுவர்.
அடுத்து விசாலமான இரு செவிகள், ஆன்மாக்களை கருமவினைகள்
ஆட்கொள்ளாமல் காத்து
வினையை
போக்கியருளக் கூடியதாக
விளங்குகிறது. உண்மைக்கோர் விளக்கமாக விநாயகரின் பெருவயிறு அண்ட
சராசரங்கள் உயிர்கள் அனைத்தும் அவருள் அடக்கம் எனும் தத்துவ
நிலையை எமக்கு உணர்த்துகிறது.
எல்லாம் அவருள் அடக்கம் எனினும் எமக்காக மகாபாரதம் எனும் இதிகாச
நூலை
வேதவியாசர் கூறிக்கொண்டே போக பிள்ளையார் தமது தந்தம்
ஒன்றை ஒடித்து எழுத்தாணியாக பாவித்து எழுதிக்கொண்டே சென்றாராம்.
அதனால் ஏகதந்தர் எனப் பெயர் பெற்று முதல் கடவுள் மட்டுமல்ல
எழுத்தாளராகவும் விளங்கினார். அடுத்து கணபதிக்குள்ளே எல்லாத்
தெய்வங்களும் அடங்குகின்றன. கணபதியின் நாபி பிருமஜ்வரூபம், முகம்
விஷ்ணுரூபம், நேத்ரம் சிவமயம், இடது பாகம் சக்தி வடிவம், வலது பாகம்
சூரியஜ்ரூபம், இவ்வாறு கணபதிஜ்துதி கூறுகின்றது.
Page 9
3. விநாயகர் அவதாரம்
கஸமுகன் யானை முகம் உடையவன், பெரிய வயிற்றை உடையவன், அண்ட
சராசரங்களும் அவருள் அடக்கம். எலியை வாகனமாக கொண்டவர். அரிசிமா,
மஞ்சள்மா, பசுஞ்சாணம் எதிலும் அவரை இலகுவாக பிடித்து வைத்து
வணங்கக்கூடியவர்.
விநாயகர்
பிரம்மச்சாரியாகவும்,
சித்தி
புத்தி
எனும்
சக்திகளுடனுன்
கிருகஜ்தாரராகவும் விளங்க வீற்றிருக்கிறார். ஞானம் என்பது; பிரும்மஜ்வரூபம்
ஆதலால் ஞானப் பிரம்ம வடிவம் விநாயகர் ஆவார். சித்தி எனும் தேவி கிரியா
சக்தியின் வடிவம்; புத்தி எனும் தேவி இச்சா சக்தியின் வடிவம். இச்சையும்
கிரியையும் இருந்தால்தான் ஞானாத்தின் மூலம் ஒரு காரியத்தை செய்ய முடியும்.
இந்த தத்துவத்தின் விளக்கமாகவே ஞான கணபதி சித்தி, புத்தி தேவியர்களுடன்
விளங்குகிறார். இச்சை கிரியை இவைகளுடன் ஞானத்தின் முலம் சிருஷ்டி,
பரிபாலனம் ஆகியவைகளை நடத்துகிறார்.
விநாயக அவதாரங்களில் முக்கியமானவை 12 ஆகும். அவற்றில்,
" வக்ரதுண்ட கணபதி" சித்தி புத்தியை மணந்தவர் மும்மூர்த்திகளைப் படைத்தவர்.
சதுர்த்தி விரதத்தைமும் மூர்த்திகளுக்குப் உபதேசித்து சக்தி கொடுத்தவர்.
சிந்தாமணியைக் கவர்ந்த கணன் எனும் அரக்கனை அழித்து சிந்தாமணியை
மீட்டதால் "சிந்தாமணி கணபதி" எனவும், கஸமுகாசுரனைக் கொன்றதால் "கஸானன
கணபதி" எனவும், விக்கினங்கள் எனபபடும் கஜ்டங்களை நீக்கியதால் "விக்ன
விநாயகர்"் எனவும் பெயர் பெற்றார்.

சிந்து எனும் அரக்கன் மயில் வடிவில் வந்தபோது அவனை அடக்கி
வாகனமாகக் கொண்டதால் "மயூரேசன்" எனப்பெயர் கொண்டார்.
அனலாசுரன் செய்த கொடுமையால் துயரடைந்த தேவர்களின் துன்பம் தீர்க்க
பெரிய வடிவம் எடுத்து அனலாசுரனை விழுங்கிவிட்டார். அவரது வெப்பத்தை
போக்க தன்மை பொருந்திய சந்திரன் கலைகளை வைத்தனர். இதனால்
"பாலசந்திரன்" எனப் போற்றப்பட்டார். சந்திரகலைகளை வைத்தும் அவரது வெப்பம்
தனியாததால் அருகம்புல்லால் அர்ச்சித்த பின்பே அவரது சூடு தனிந்தது.அதனாலே
அருகம்புல் அவருக்கு பிரியமாயிற்று.
புகை வடிவில் வந்த அசுரனை புகையாலே அழித்து "தூமகேது" எனப்பெயர்
பெற்றார். பலி எனும் அரக்கனைக் கொன்றதால் "கணேசர்" என அழைக்கப்பட்டார்.
யானையின் சித்திரத்தை பார்க்கும் போது பார்வதி பரமேஜ்வர்களிடம் தோன்றியதால்
"கணபதி" என அழைக்கப்பட்டார். தேவர்களின் இடர் தீர்க்க விரும்பி அதிதி
கணவரான காசியப்ப முனிவரின் உபதேசம் படி விநாயக மந்திரத்தை ஸபித்து
மதோற்கடரை மகனாக பெற்றார். உமாதேவி துராசதன் என்ற அரக்கனை அழிக்க
சிவபெருமான் முகத்தில் இருந்து ஐந்து முகமுடைய கணபதியாக துண்டி கணபதி
தோன்றினார்.
வல்லபவ கணபதியாக மாரீசி முனிவரின் மகள் வல்லபையை மணந்து எமக்கு
காட்சி தருகிறார். இப்படியாக பல அவதாரங்கள் எடுத்து அருள் தரும் விநாயகரை
மறாவாது துதிப்போம். இப்படியாக பல வித அவதாரங்களை தெய்வங்களுக்காகவும்,
தேவர்களுக்காகவும்,
ரிஷிகளுக்காகவும்
மானுடர்களுக்காகவும் எடுத்து
அவர்களுக்கு வேண்டியதை தந்து அருள் புரிந்துள்ளார் என்பதை புராணங்கள்,
இதிகாசங்கள் மூலம் அறியலாம்்.

4. விநாயகருக்குரிய விரதங்கள்
காணாபத்ய நெறி நிற்பாருக்கு சதுர்த்தி ஒரு பெருந்திருநாள். இதில் சுக்கில
சதுர்த்தி, கிருஷ்ண சதுர்த்தி என்றும் இரு பட்சங்களில் வரும் சதுர்த்தி நாட்கள்
விநாயகரை வழிபட ஏற்ற நாட்கள். விநாயகருக்கு உரிய விரதங்கள். வாரந்தோரும்
வரும் வௌ்ளிக்கிழமை, (ஆவணி விநாயக சதுர்த்தி, மாதந்தோறும் வரும்
வளர்பிறை சதுர்த்தி, தேய் பிறை சதுர்த்தி(சங்கடஹர சதுர்த்தி) காரத்திகை மாதத்து
பிரதமை திதி முதல் மார்கழி மாதத்து சஷ்டி திதி வரையான 21 நாட்கள் அமைந்த
விநாயக சஜ்டி ஆகிய விரதங்கள் ஆகும்.
சதுர்த்தி தேவி வித்யை எனவும், அவித்தை எனவும் இரு வடிவங்கள் உள்ளவள்.
நான்கு வித புருஷார்த்தங்களை நல்குபவள் (தருபவள்) வித்யா ரூபமுள்ள சுக்ல
சதுர்த்தி தேவி. சதுர்வித சங்கடங்களை போக்குபவள் அவித்யா வடிவமுள்ள
கிருஷ்ண சதுர்த்தி தேவி. அதனால் வளர் பிறை சதுர்த்தி நாளிலும், (தேய் பிறை)
சங்கடகர சதுர்த்தி நாளிலும், விநாகரை வணங்கி வழிபடுவர்.
நான்கு திருக்கரங்களோடும் யானை முகக்தினராய் வெண்ணிறமான குழந்தையாக
பாலச்சந்திர விநாயகர் என்ற திருபெயருடன் ஆவனி வளர் பிறைச் சதுர்த்தியும்,
விசாக நட்சத்திரமும் சோமவாரமும், சிம்ம லக்கினமும் கூடிய நன்னாளில் பார்வதி
தேவிக்குத் திருக்குமார ராய்த் தோன்றினார். அத் திருநாளையே ஆவனி விநாயக
சதுர்த்தி நாளாக நாம் கொண்டாடுகிறோம்
பெருங்கதை படித்தல்(விநாயக சஷ்டி விரதம்) குமார சஷ்டி விரதம் என்றும்
அழைப்பர். விநாயக சஷ்டி விரதம் கார்த்திகை மாதத்து கிருஷ்ண பட்சம் பிரதமை
திதி முதல் மார்கழி மாதம் சுக்ல பட்சம் திதி வரை உள்ள 21 நாட்கள் விரதம்
அனுட்டிக்க வேண்டும். விரதம் இருப்பவர்கள் 21 இழைகள் (முடிச்சுகள்) கொண்ட
நூலை இறுதி விரத நாள் பூர்த்தி செய்யும் போது காப்பாக அணிந்து கொள்ள
வேண்டும். ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் அணிந்து
கொள்ள வேண்டும்.
சதுர்த்தி விரத நாளில் இந்துக்களாகிய நாம் தலையில் நீராடி தூய்மையான
ஆடை அணிந்து விநாயகரை மனதில் நினைந்து ஆலயம் சென்று அவரை வணங்கி
தலையில் மூன்று முறை குட்டி தோப்புக்கரணம் போட்டு அவருக்கு பிரியமான ''ஓம்
கணேசாய நம'' எனும் மந்திரத்தை சொல்லி வணங்க இஷ்ட சித்திகள் யாவும்
கிடைக்கும். அருகம் புல்லால் சதுர்த்தி நாளில் அர்ச்சிப்பது பல வித நன்மைகளை
அளிக்கும்.
ஒரு பொழுது உணவருந்தி விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். 21 நாட்கள்
அனுட்டிக்கும் விநாயக சஷ்டி விரதத்தில் 20 நாட்கள் ஒரு பொழுது உணவும்
21வது நாளில் உபவாசம் இருந்து உணவு ஏதும் உண்ணாது விநாயக சஷ்டி பூஸை
நிறைவு பெற்றதும் 21 இழையைக் கொண்ட காப்புநூல் கையில் அணிந்து கொண்ட
பின் விரத த்தை பூர்த்தி பண்ணலாம். விக்னங்கள் சங்கடங்கள் ஏதும் வராது
காப்பவர் விக்னேஜ்வர பெருமான். அவருக்கும் பிரியமான மோதகம், மாம்பழம்
ஏனைய கனிவர்க்கங்கள் திண்பண்டங்கள் யாவும் படைத்து தும்பிக்கையான் பாதம்
பணிந்து நம்பிக்கையோடு வாழ்வோம்.

5. விநாயக வழிபாடு
ஆலயத்தில் முதலில் வணங்க வேண்டிய தெய்வம் விநாயகர் ஆவார். அவரை
தலையில் மூன்று முறை முறை குட்டி வலது கையால் இடது காதையும், இடது
கையால் வலது காதையும் பிடித்து தோப்புக்கரணம் போட்டு வணங்குதல் வேண்டும்.
அப்படி வணங்குவதால் அவரின் பெரும் அருளைப் பெறலாம். விநாயகரை எமது
ஏனைய தெய்வங்களும் வழிபட்டுத் தமது நோக்கத்தை நிறைவேற்றியதாக
புராணங்கள் கூறுகின்றன.
திரிபுர அசுரர்களை சிவபெருமான் அழிப்பதற்கு முன்பாக பிள்ளையார் பூஸை
செய்யாமல் அவரை வணங்காமல் தேர் ஏறிப் புறப்பட்டு செல்லும் வழியில் தேரின்
அச்சு முறிந்து விடுகிறது. பின்னர் கணபதியை பூஸித்து வழிபட்ட பின்பே
இடையூரின்றி அசுரர்களை வென்றார். உமா பார்வதி பண்டாசுரனுடன் சத்தியப் போர்
புரிந்து அசுரனின் விக்ன யந்திரத்தைப் பயனற்றதாகச் செய்யும் வழி தெரியாது
தவிக்கும் போது நாரத முனிவர் கூறியதற்கு ஏற்ப மயூரேச க்ஷத்திரத்தில்
விநாயகரை வேண்டி கடுந்தவம் புரிந்தார்.
இதனால் தோல்வி ஏற்படும் வேளை தன்னை நினைத்து தவம் இயற்றிய தாய்க்கு
உதவி செய்து விக்ன யந்திரத்தை உடைத்து கஸமுகம் கொண்ட அரக்கனை
அழித்து எளிதில் வெற்றி கொளச் செய்தார்.
திருமாலும் இலட்சுமி தேவியும் கணபதியை குறித்துத் தவம் புரிந்து பல
நலன்களைப் பெற்றதாகவும் இராமவதாரத்தின் போது சீதையைப் பிரிய நேர்ந்த
போது சிவனின் உபதேசப்படி ஹேரம்ப மூர்த்தியான கணபதியைத் தொழுது
இராவணனை வென்று சீதையை மீட்டார் என்றும் புராண வரலாறு கூறுகிறது.
சூரியனும் தமது ஒளி எக்காலமும் குறையாது இருப்பதற்காகக் கணபதியைத்
தட்சிணத்தில் அர்க்க கணபதி வடிவத்தில் வழிபடுகிறார். படைக்கும் தேவனான
பிரம்மா தனது படைப்பில் ஏதும் பிழை வராது விநாயகரை வழிபட்ட
பின்பே
சிருஷ்டித்தார். அதனால் இடையூறு ஏதும் வரவில்லை. முருகன் ஸ்ரீ வள்ளியை
கரம் பற்ற யானை வடிவில் வந்து வேலனுக்கு உதவி செய்தார்.

6. விநாயகருக்கு உரிய புஜ்பங்கள்

அருகம்புல்

எருக்கம் பூ

வன்னி இலை

மந்தார மலர்

தாமரைப் பூ

மல்லிகைப்பூ

செம்வசத்தை

தும்பைப் பூ
7. விநாயகருக்கு உரிய பழங்கள்

மாம்பழம்

கொய்யாப் பழம்

வாழைப்பழம்

பலாப்பழம்

திராட்சைப் பழம்


7.1 விநாயகருக்கு உரிய திண்பண்டங்கள்

மோதகம்

கொழுக்கட்டை

அவல்

கடலை

பயறு சுண்டல்

அப்பம்

வள்ளிக் கிழங்கு

எள்ளுப் பொரி உருண்டை

தேன்

பால்

கரும்பு

இளநீர்




8.
பஞ்ச புராணம்
திருச்சிற்றம்பலம்

தேவாரம்

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர ்பயில்வலி வலமுறை யிறையே.

திருவாசகம்

வானாகி மண்ணாகி
வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி
உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான்எனது என்று
அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை
என்சொல்லி வாழ்த்துவனே.

திருவிசைப்பா

ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுசூழ் கடந்த்தோர் உணர்வே
தௌிவளர் பளிங்கன் திரள்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்கும் தேனே
அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே
அம்பலம் ஆடரங்காக
வௌிவளர் தெய்வ கூத்துகந்தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.


திருப்பல்லாண்டு

பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லை தன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்
பலமே இடம் ஆகப்
பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே
பால்லாண்டு கூறுதுமே.

திருப்புராணம்

ஆதியாய் நடுவுமாகி ஆளவி்லா அளவு மாகிச்
சோதியாய் உணர்வு மாகித் தோன்றிய பொருளுமாகிப்
பேதியா ஏக மாகிப் பெண்ணுமாய் ஆணு மாகிப்
போதியாய் நிற்குந் தில்லை பொதுநடம் போற்றி போற்றி.

திருப்புகழ்

உம்பர்தருத் தேனுமணிக் கசிவாகி
ஒண்கடலில் தேனமுதத் துணர் ரி
இன்பரசத் தேன்பருகிப் பலகாலும்
என்றன் உயிர்க் காதரவுற் றருள்வாயே
தம்பிதனக் காகவனத் தனைவோனே
தந்தைவலத் தாலருள்கைக் கனியோனே
அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே
ஐந்துகரத்தானைமுகப் பெருமாளே.

9
. PANCHA PURAANAM
THIRUCHCHITRRAMBALAM
THEVARAAM
Pidiyathan Uruvumai Kolamihu Kariyathu
Vadikodu Thanathadi Valipadum Avaridar
Kadikana Pathivara Arulinan Mihukodai
Vadivinar Payilvali Valamurai Yiraiye.
THIRUVAASAHAM
Vaanaahi Mannaahi
Valiyaahi Oliyaahi
Uunaahi Uyiraahi
Unmaiyumaai Inmaiyumaaik
Koanaahi Yaanenathu Entru
Avaravaraik Kuuththaatu
Vaanaahi Nintraayai
Ensolli Vaalththuvane.
THIRUVISAIPA
Olivalar Vilakkeh Ulappila Ontrae
Unarvu Sool Kadanthathoar Unarvae
Thelivalar Palingin Thiral Manik Kuntrae
Siththathul Thiththikkum Thenae
Alivalar Ullaaththu Aananthak Kaniyae
Ambalam Aadu arngaaha
Velivalar Theivak Koothu kanthaayai
Thondanaen Vilambumaa Vilambae.
Page 18
THIRUPPALLAADU
Paalukkup Paalagan Vaendi Azhuthidap
Paarkkadal yeenthapiraan
Maalukkuch Shakkaram Antrarul Seithavan
Manniya Thillai Thannul
Aalikkum Anthanar Vaalhintra Chittram
Palamae Yidamaagap
Paalitthu Nattam Payilaval Lanukkey
Pallaandu Kooruthumey.
THIRUPPURANAM
Aathiyaai Naduvumaahi Allavilaa Allavumaahich
Jothiyaai Unarvu maakith Thoantriya Porullumaahip
Paethiyaa Ehamaahip Pennumaai Aanumaahip
Poathiyaai Nitkum Thillaaip Pothu Nadam Poatri Poatri.
THIRUPPUHAL
Umbartharu Thaenumani kasivaki
Onkadalil Thaen Amuthat Thunarvoori
Inbarasat thaenparuhip Palakaalum
Enthan Uyirk Kaatharavut Tarulvaaye
Thambi ThanakkaakaVanath Thanaivone
ThanthaiValat thaal arulkai Kaniyoanae
AnbarThamak kaanaNilaip Poruloanae
Ainthu Karathanai Mukap Perumaalae.
Page 19
10. விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன் அரை ஞானும் பூந்துகி லாடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தல கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொண் முடியும்
திரண்ட முப ்புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதங் கடந்த துரிய மெய்ஞ் ஞான
அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே
முப்பழம் கரும் மூஷிக வாகன
இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத் தானெழுந்தருளி
மாயப் பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தௌிவாய்ப்
பொருந்தவே வந்தென் உள்ளந்தனிற் புகுந்துக்
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திரம்இது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடாயுதத்தாற் கொடுவினை களைந்தே
Page 20
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
தெவிட்டாத ஞானத் தௌிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கு முபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக்கருளிக்
கருவிக ளொடுக்குங் கருத்தினை யறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்குந் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறாதாரத் தங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி யதனிற் குடிய அசபை
விண்டெழு மந்திரம் வௌிப்பட உரைத்து
மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்புங் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையுங் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற் சக்கரத்தின் உறுப்பையும் காட்டி
சண்முக தூலமுஞ் சதுர்முக சூக்கமும்
எண்முக மாக இனிதெனக் கருளிப்
Page 21
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினிற் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக் கருளி
என்னை அறிவித் தெனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்தே
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தௌிவித்து
இருள் வௌியிரண்டிற் கொன்றிட மென்ன
அருள்தரும் ஆனந்த தழுத்திஎன் செவியில்
எல்லை இல்லா ஆனந்தமளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தி னுள்ளே சாதாசிவம் காட்டிச்
சித்தத்தி னுள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக்் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே.
Page 22
11.11.11.11. VINAYAKAR AKAVAL
Chitha kalaba chentha maraippoom
Patha chilambu palayisai pada
Pon araiganum punthukiladaiyum
Vanna marungil valarnthalaharippa
Pelai vayirum perumparak kodum
Vela mukamum vilanku sindhuramum
Anju karamum ankusa pasamum
Nejit kudikkonda nila meniyum
Nanra vayum nalirupuyamum
Munru kannum mummadhachuvadum
Irandu cheviyum ilanguponmudiyum
Thiranda muppurinullum thikaloli marbum
Chorpadham kadantha thuriyameignana
Arputhan eenra karpaka kalire
Muppalam nukaram musika vakana
Ippoluthu ennai atkola vendi
Thayai enakku thanelunthu aruli
Mayap piravi mayakkam aruthe
Thirunthiya muthal aintheluthum thelivai
Porunthave vanthen ulanthanil pukunthu
Guruvadivaki kuvalayanthannil
Thiruvadi vaithu thiramithu porulena
Vadavakaithan makilthenak karuli
Kodayudhthal koduvinnai kalainthe
Page 23
Uvtta upathesam pukattiyen cheviyil
Thevittatha gnana thelivaiyum katti,
Aimpulam thannaiyadakkum ubayam
Inpuru karunaiyin inithenakku aruli
Karuvika lodung karuthinai arivithu
Iruvinai thannai aruthirul kadinthu
Thalamoru nankum thethanakku aruli
Malam oru munrin mayakkam aruthe
Onbathu vayil orumanthirathal
Aimpulakkathavai adaippathum katti
Aaradharathu ankusa nilaiyum
Pera niruthi pechurai aruthe
Idai pingkalaiyin elutharivithu
Kadaiyit chulumunai kapalamum katti
Munru mandalathin muttiya thunin
Nanrelu pampin navil unarthi
Kundaliyathanil kudiya asabai
Vindelu manthiram velippada urithu
Mulaathaarathin muundelu kanalai
Kalal eluppum karutharivithe
Amutha nilaiyum athithan iyakkamum
Kumutha sakayan gunathaiyum kuri
Idai chakkarathin eerettu nilaiyum
Udarchakkarathin uruppaiyum katti
Shanmuka thoolamum chathurmuka chookkamum
Enmukamaka inithenakkarulip
Page 24
Puriyattu kayam pulappada enkku
Theriyattu nilaiyum therisanap paduthi
Karuthinit kapala vayit katti
Iruththi muthi inithenakku aruli
Ennai arivithu enkku arul purinthu
Munnai vinayin muthlai kalainthe
Vakkum manamum illa manolayam
Thekkiye enran chinthai thelivithu
Irulveli irandir konrida menna
Arultharum ananthathu aluththi encheviyil
Ellai illa anantyham alithu
Allal kalainthe arulvali katti
Chathathin nulle sadasivam katti
Chithathinnulle sivaligam katti
Anuvirkanuvai appalukkappalai
Kannumutri ninra karumbulle katti
Vedamum neerum vilanga niruthi
Kudumei thondar kulathudan kutti
Anju kkarathin arumporul thannai
Nenjakkaruthin nilaiyari vithu
Thathuva nilaiyai thanthenai aanda
Vithaka vinaayaka viraikalal charane!
Page 25
12. நன்றியுரை
"பிள்ளையார் கதைகள்" , "காணாபத்யம்", புராணங்கள் போன்ற
நூல்களின் உதவியால் இப்புத்தகம் வௌிவருகிறது.
அப்பதிப்பகத்தாருக்கு எமது மனமார்ந்த நன்றியையும், மகிழ்ச்சியையும்
தெரிவித்துக்கொள்கிறோம். எமது கன்னி படைப்பான இந்நூல்
வௌிவருவதற்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து இன்னும் பலநூல்கள்
வௌிவருவதற்கும் இதே ஊக்கத்தை அளிக்குமாறு நன்றியுடன்
வேண்டுகிறோம்.
நன்றி!

13. நற்கடமைகள

அன்பை பெருக்கு அறிவை கூட்டு
ஆசையை வெறுத்து ஆணவத்தை அகற்று
இனிமையைக் கூட்டு இறைவனைத் தொழு
ஈன்ற தாயை போற்று ஈரத்தை இதயத்தில் ஏற்று
உண்மையாய் வாழு உயர்வு பெற முயலு
ஊதாரித்தனத்தை ஒதுக்கு ஊரை ஏற்றம் செய பழகு
எண்ணியதை தொடங்கு எவரிடமும் பகை விரட்டு
ஏணியாய் நீ இருந்து ஏற வாழ்வில் உதவு
ஐயமின்றி ஒவ்வொருவரினனும் ஐயம் தீர்த்து விடு
ஒற்றுமை நிலைத்து ஒரு மனதாய் செயல்படு
ஓடு ஏந்தாது ஓர்மமாய் இருந்து விடு
ஒளவியம் பேசாது கூ, ஒளடதமாய் இருந்து பாரு!